January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தால் மட்டுமே நாட்டை மீண்டும் திறக்க முடியும்’;பிரதி பொலிஸ் மா அதிபர்

நாட்டில் அமுலில் உள்ள பயண கட்டுப்பாடுகளை 14 ஆம் திகதி நீக்குவதா, இல்லையா என்பது மக்களின் கைகளில் தான் உள்ளது என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மக்கள் நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமது ஒத்துழைப்பை சுகாதார துறைக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பயணக்கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள காலகட்டத்தில் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தால் மட்டுமே ஜூன் 14 அன்று நாட்டை மீண்டும் திறக்க முடியும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி செல்ல வேண்டும் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் வலியுறுத்தியுள்ளார்.

நேற்றைய தினம் (04) மட்டும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதற்காக 975 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, மேல்  மாகாணத்திற்குள் வரும் 14 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் உள்ள சோதனைச்சாவடிகளில் 59,280 வாகனங்கள் கொழும்புக்குள் நுழைந்துள்ளமை பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.