இலங்கையில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் ஒரே நாளில் அதிகூடிய சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, இன்று காலை 6 மணி வரையான 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,047 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் நாளொன்றில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இவர்களில் 98 பேர் கண்டியிலும் , 160 பேர் மாத்தளையிலும், 119 பேர் நிக்கவரெட்டியவிலும் கைதாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சளார் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் அமுலுக்குவந்த கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் அச்சட்டத்தைமீறும் வகையில் செயற்பட்ட 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.