November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயண கட்டுப்பாட்டுக்கு பிறகு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையும்; வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன

இலங்கையில் தொடர்ச்சியான இரண்டு வார கால பயணக்கட்டுப்பாட்டினால் கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவடையும் சாத்தியம் உள்ளதாக இலங்கை வைத்தியர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கொவிட் -19 வைரஸ் பரவல் சமூக பரவலாக மாற்றம் கண்டுள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தற்போது சுகாதார தரப்பினர் எடுத்துள்ள நடவடிக்கைகள் சிறந்த ஒன்றாகும்.

மேலும், தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் நிச்சயமாக தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையும்.

எனவே இரண்டு வாரங்களின் பின்னர் எடுக்கும் தரவுகளை பார்க்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  கணிசமாக குறையும்.

எனவே அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்களை வரவேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தற்போதுள்ள அச்சுறுத்தல் சூழலில் மக்கள் முடிந்தவரை வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருப்பதுடன், சுகாதார வழிமுறைகளை வீடுகளிலும் பின்பற்றி எமக்கு ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் எனவும் ஒரு சில சந்தர்ப்பங்களில் மக்கள் சகல அச்சுறுத்தல்களையும் மறந்து அலட்சியமாக நடந்து கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள இந்த இருவார காலங்களில் பெறப்படும் தரவுகளை கொண்டு அடுத்ததாக நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய முடியும் எனவும் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.