யாழ்ப்பாணம்,புங்குடுதீவு குறிகட்டுவான் இறங்கு துறையிலிருந்து நயினாதீவு வரையிலான ‘படகுப் பாதை’ கடற்படையினரால் திருத்தப்பட்டு மீண்டும் இயங்கும் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த 16 ஆம் திகதி வீசிய கடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலையால் குறிகட்டுவான் இறங்கு துறையில் ஒரு பகுதி கடலில் மூழ்கியவாறு செயலிழந்திருந்தது.
இதனால் தீவில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி அத்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனைக்கு அமைய அதனை புனரமைக்கும் பணிகள் 17 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டன.
10 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட புனரமைப்பு பணிகளின் பின்னர் அந்தப் பாதை மீண்டும் இன்று (27) முதல் இயங்க ஆரம்பித்துள்ளது.
யாழ்ப்பாணம், புங்குடுதீவு குறிகட்டுவான் இறங்கு துறையிலிருந்து நயினாதீவு வரையில் பொருட்களையும் பயணிகளையும் ஏற்றி செல்வதற்காக இந்த ‘படகுப் பாதை’ பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.