January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நேற்றைய தினம் வாகன விபத்துகளில் 7 பேர் பலி!

File Photo

இலங்கையில் நேற்று பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டிருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற பல்வேறு வாகன விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிந்தெனிய, கெஸ்பேவ, மஹபாகே, மகியங்கனை, பன்னல ஆகிய பிரதேசங்களில் இந்த விபத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரத்தில் வாகன விபத்துக்கள் குறைவடைந்த நிலையில் நேற்றைய தினத்தில் மீண்டும் அதிகளவாக விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டிருந்த காலப் பகுதியில் வாகனங்களில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்படாத போதும், சில பிரதேசங்களில் சட்டத்தையும் மீறி அதிகளவில் வாகனங்கள் வீதிகளில் பயணித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.