February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பயணக் கட்டுப்பாடு தளர்வின் போது மக்கள் ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை’; இராணுவத் தளபதி அதிருப்தி

பயணக்கட்டுப்பாடுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) தளர்த்தப்பட்ட போது அதிகமானவர்கள் நடத்து கொண்ட விதம்  திருப்பதி அளிக்கவில்லை என கொவிட் 19 வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறினார்.

அத்தியாவசிய பொருட் கொள்வனவிற்கான பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு பதிலாக எதிர்காலத்தில் வாகனங்கள் ஊடாக அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்க வேண்டியிருக்கும் என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

பயணக் கட்டுப்பாடு தளர்வின் போது வீட்டுக்கு அருகில் உள்ள கடையில் பொருட்களை கொள்வனவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்ட போதும் அதனை சிலர் தவறாக பயன்படுத்தி கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

பொதுமக்களின் இவ்வாறான நடத்தை நாட்டை மிகவும் ஆபத்தான கட்டத்திற்கு கொண்டு செல்ல வழிவகுக்கும் எனவும் அவர் கூறினார்.