April 30, 2025 18:19:39

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ் வாகன விபத்தில் பலி

புத்தளம் நகர சபைத் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான கே.ஏ.பாயிஸ் (வயது-52) விபத்து ஒன்றில் சிக்கி இன்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட இவர் பிரதி அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளார்.