தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் 31 வயதுடைய அமெரிக்க பிரஜையொருவர் பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனிமைப்படுத்தல் விதிகள் தொடர்பில் வழங்கப்பட்டிருந்த அறிவுறுத்தல்களுக்கு முரணாகவும், அவற்றை தொடர்ந்து புறக்கணித்தும் வந்த காரணத்தால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 28 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.