October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

இலங்கையின் 14 மாவட்டங்களில் சில பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்காள விரிகுடாவின் கொந்தளிப்பான தன்மை காரணமாக அடுத்த 26 நாட்களுக்கு நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தின் எதிர்வு கூறலுக்கு அமையவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு நாட்டில் எதிர்பார்க்கப்படும் மழை பெய்தால், பல நீர் நிலைகள்  பெருக்கெடுப்பதுடன் பேரழிவு தரக்கூடிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவிற்கும் நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, கொத்மலை, நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மாத்தளை மாவட்டத்தின் வில்கமுவ, லக்கம, பல்லேகம, ரிவஸ்டன் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, கண்டி மாவட்டத்தின் கஹவட்டகோரள, யட்டிநுவர, உடுநுவர, உடபலாத்த, கங்க இஹல கோரளை, தெல்தொட்ட, பஸ்பாகே கோரளை, அக்குரண, பன்வில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, புலத்கொஹூபிட்டிய, யட்டியாந்தோட்டை, தெரணியகல, தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, குருவிட்ட, எஹலியகொட, கிரியெல்ல, அயகம, கலவான, நிவித்திகல, எலபாத்த, பெல்மடுல்ல, கஹவத்த, ஓப்பநாயக்க, பலாங்கொடை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்ஹல, பதுரெலிய, பாலிந்தநுவர, அகலவத்த, வெலிவிட்ட, இங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் காலி மாவட்டத்தின் நெலுவ, தவலம, நாகொட, எல்பிட்டிய, யக்கலமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கட்டுவன, வலஸ்முல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவை தவிர குருநாகல், கம்பஹா, கேகாலை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு மற்றும் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் தமது சூழல் குறித்தும் கட்டிடங்கள் மற்றும் நிலத்தில் ஏற்படும் விரிசல் குறித்தும் அவதானமாக செயற்படும் படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.