கொழும்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 7 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் மஹவத்த வீதி, 233 தோட்டம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோன்று, மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேநேரம், நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
6 மாவட்டங்களைச் சேர்ந்த 42 கிராம சேவகர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் 8 கிராம சேவகர் பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்தின் 9 கிராம சேவகர் பிரிவுகளும், களுத்துறை மாவட்டத்தின் 16 கிராம சேவகர் பிரிவுகளும், மாத்தளை மாவட்டத்தின் 3 கிராம சேவகர் பிரிவுகளும், நுவரெலியா மாவட்டத்தின் ஒரு கிராம சேவகர் பிரிவும் வவுனியா மாவட்டத்தின் ஒரு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.