January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு முறையான திட்டத்தை வகுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!

நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான முறையான திட்டம் ஒன்றை வகுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடுமாறு இராணுவ தளபதிக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையில் இரண்டு கட்டங்களாக பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.