இலங்கைகயில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் தொடர்வதால், தூர இடங்களுக்கான பஸ் போக்குவரத்து தொடர்ந்தும் நிறுத்தப்பட்டிருக்கும் என்று இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
கடந்த 11 ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை கடந்த 13 ஆம் திகதி இரவு முதல் நாடு பூராகவும் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடு நாளை அதிகாலை முதல் தளர்த்தப்படவுள்ளது.
எனினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து தொடர்ந்தும் நிறுத்தப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோருக்காக மாத்திரம் பஸ் சேவைகள் சில இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தூர இடங்களுக்கான ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் அலுவலக பணியாளர்களுக்கான ரயில் போக்குவரத்துகள் மாத்திரம் இந்த காலப்பகுதியில் இடம்பெறும் என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.