கனடாவின் ஒன்ராரியோ மாநில சட்டவாக்க சபையில் ‘தமிழ் இனவழிப்பு சட்டமூலம்’ நிறைவேற்றப்பட்டதற்கு இலங்கை அரசு அதிருப்தி வெளியிட்டுள்ளது.
ஒன்ராரியோ மாநில சட்டவாக்க சபையில் ‘தமிழ் இனவழிப்பு அறிவூட்டல் வாரம்’ என்ற தலைப்பில் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று இலங்கைக்கான கனேடிய தூதுவரைச் சந்தித்தபோது, அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழ் இனவழிப்பு இடம்பெற்றமை கண்டறியப்படவில்லை என்ற கனேடிய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ நிலைப்பாட்டுடன், ஒன்ராரியோ சட்டமூலம் முரண்படுவதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த சட்டமூலத்துக்கு ஒன்ராரியோ உப ஆளுநர் வழங்கிய அங்கீகாரத்தை இடைநிறுத்துமாறும் அமைச்சர் தினேஷ் குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.