‘இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் விளைவாக சினோபார்ம் தடுப்பூசி பாவனைக்கு அனுமதி கிடைத்தது’ என்ற தகவலை உலக சுகாதார ஸ்தாபனம் மறுத்துள்ளது.
இலங்கையின் கொரோனா நிலைமைகள் தொடர்பாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் நேற்று மேற்படி கருத்து வெளியிட்டிருந்த நிலையில், உலக சுகாதார ஸ்தாபனம் அதனை மறுத்துள்ளது.
சீன உற்பத்தியான சினோபார்ம் தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்கு அனுமதித்தமைக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான கலந்துரையாடலுக்கும் தொடர்பில்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
“இலங்கைக்கு 6 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசி கிடைத்திருந்தாலும், அவற்றைப் பயன்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி வழங்கப்படவில்லை என்பதை ஜனாதிபதி உலக சுகாதார ஸ்தாபன தலைவரின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
உலக சுகாதார ஸ்தாபன தலைவர்- ஜனாதிபதி கோட்டாபய சந்திப்பின் விளைவாக சினோபார்ம் பாவனைக்கு அனுமதி கிடைத்தது” என்று ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இருவருக்கும் இடையிலான சந்திப்புக்கும் தடுப்பூசி அனுமதி வழங்கப்பட்டதற்கும் தொடர்பில்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.