November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’

நாட்டை முடக்குவதற்கு எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கொவிட் -19 ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

எனினும் அடுத்துவரும் சில நாட்களில் கொரோனா பரவல் நிலைமைக்கு அமைய மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பயணக் கட்டுப்பாடுகளின் போது, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை பெற்று கொள்வதற்கான சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவத் தளபதி வலியுறுத்தினார்.

எனவே, நாட்டு முடக்கப்படும் என் அச்சத்தில் மக்கள் தேவைக்கு அதிகமான பொருட்களைக் கொள்வனவு செய்து சிரமங்களுக்கு உள்ளாக வேண்டாம் எனவும் இராணுவத்தளபதி அறிவுறுத்தியுள்ளார்.

நாளை (செவ்வாய்க்கிழமை)முதல் முப்படையினரின் உதவியுடன் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தை விரைவுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் தடுப்பூசி திட்டம் விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.