கொவிட் தொற்றுப் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பயணிகள் வருவதற்கு தடை விதிப்பதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) தீர்மானித்துள்ளது.
இதன்படி மே 12 ஆம் திகதி நள்ளிரவு முதல் குறித்த நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பயணிகள் வருவதற்கு தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் தேசிய அவசர நிலை மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் குறித்த நாடுகளில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியம் ஊடாக வேறு நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு குறித்த தடை விதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய அரபு இராச்சிய குடிமக்கள், இராஜதந்திர பணிகள், உத்தியோகபூர்வ தூதுக்குழுக்கள், கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு நாட்டுக்கு வர முடியுமெனவும் ஆனால் அவர்கள் நாட்டுக்கு வந்ததும் பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.