file photo: Facebook/ Mactan-Cebu International Airport Authority
இலங்கை, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் தமது நாட்டுக்கு வருவதை பிலிப்பைன்ஸ் தடை செய்துள்ளது.
இந்தியாவில் பரவும் புதிய வகை கொரோனா அச்சுறுத்தலைக் கருத்திற்கொண்டே, பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இவ்வாறு தடை விதித்துள்ளது.
இந்த தடை மே மாதம் 7 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும் பிலிப்பைன்ஸின் நிறைவேற்றுச் செயலாளர் செல்வடோர் மெடெல்டியா தெரிவித்துள்ளார்.
மேற்படி நான்று நாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் தடைக் காலத்துக்கு முன்னர் வருபவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது.
கடந்த மாதம் முதல் இந்திய பயணிகளுக்கு தடை விதித்துள்ளதோடு, பிலிப்பைன்ஸில் இந்தியாவில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.