File Photo
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற, அரசாங்கத்தின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்தை சில கட்சிகள் புறக்கணித்துள்ளன.
இந்த கூட்டம் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது.
மாகாண சபை தேர்தல் முறையில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் நேற்று ஒன்றுகூடினர்.
இதன்போது, அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேச நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் இலங்கை சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரன ஆகியோர் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா கொம்யுனிஸ்ட் கட்சி உட்பட மேலும் சில கட்சிகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்ததாகத் தெரியவருகின்றது.
கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து அதிகமான உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, கூட்டத்தைப் புறக்கணித்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதேநேரம், இதுதொடர்பில் நடைபெற்ற முன்னைய கூட்டத்தையும் பல பங்காளிக் கட்சிகள் புறக்கணித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்தில், கட்சித் தலைவர்கள் மாத்திரமே கலந்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.