September 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை விமல், வாசு, கம்மன்பில புறக்கணித்தனர்

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவுக்குமிடையில் நடைபெற்ற கூட்டத்தை அமைச்சர்களான விமல் வீரசன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.

குறித்த கூட்டத்திற்கு கட்சித் தலைவர்களுக்கு மேலதிகமாக, அதிகமானோர் அழைக்கப்பட்டுள்ளமையால் தாம் கூட்டத்தை புறக்கணிப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கான கூட்டம் இன்று(திங்கட்கிழமை) பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு 20 பேரளவில் கலந்துகொள்ள வேண்டிய நிலையில், 51 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆளும் கட்சியுடன் 14 பங்காளிக் கட்சிகளே ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் தவிர்ந்தவர்கள் கலந்துகொண்டுள்ள கூட்டத்தில் தமது கட்சியின் பிரச்சினைகளை கலந்துரையாட முடியாதென்று கூறி, மேற்படி அமைச்சர்கள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

This slideshow requires JavaScript.