
இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, இலங்கையின் பயணிகள் சிங்கப்பூருக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 14 நாட்களுக்குள் இலங்கைக்குச் சென்ற பயணிகள் சிங்கப்பூர் வருவதையும் அந்நாடு தடை செய்துள்ளது.
பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் பயணிகளுக்கும் சிங்கப்பூர் பயணத் தடை விதித்துள்ளது.
இன்று இரவு முதல் இந்த தடை அமுலுக்கு வருவதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளின் பயணிகள் சிங்கப்பூரின் ஊடாக வேறு நாடுகளுக்கு பயணம் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.