மக்களுக்கு உறுதியளித்தபடி அரசாங்கம் தேசிய பாதுகாப்பையும் நாட்டின் இறையாண்மையையும் உறுதி செய்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய கொவிட்-19 நோய்த் தொற்றினால் உலகில் தொழிலாளர் வர்க்கம் மிகவும் சவாலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் உழைக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் கட்டுப்பாடுகளை விதிக்க மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் விவசாய பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை 1,000 ரூபாயாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததன் மூலம் அந்த மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கு அரசாங்கம் வழி செய்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா தொற்றுநோய் காரணமாக தொடர்ந்தும் இரண்டாவது வருடமாக மே தின கொண்டாட்டங்களை தொழிலாளர்கள் இழந்துள்ளதாகவும் தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதிளிக் மே தின அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.