எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை கைது செய்யப்பட மாட்டார் என்று சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
தான் கைது செய்யப்படுவதைக் தடுக்கக் கோரி ஹரின் பெர்னாண்டோ உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி இதனைத் தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான எஸ். துரைராஜா, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் மகிந்த சமயவர்தன முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது, மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 14 திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதாக நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளனர்.
ஹரின் பெர்னாண்டோ கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.