April 30, 2025 15:40:50

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் திருமண நிகழ்வுகள், ஒன்றுகூடல்களுக்கு இரண்டு வாரங்கள் தடை!

இலங்கையில் மே 3 ஆம் திகதி முதல் திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.

இரண்டு வார காலத்திற்கு இந்தத் தடை அமுலில் இருக்கும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டின் கொவிட் நிலைமையை கருத்திற்கொண்டு தேசிய கொவிட் தடுப்பு செயலணியினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மத வழிபாட்டு இடங்களில் கூட்டுச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நேற்று மாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. -(3)