
இலங்கை – சீன பாதுகாப்பு தரப்பினருக்கு இடையிலான தொடர்புகளை பலப்படுத்திக்கொள்ளும் நோக்கத்தில் தான் சீன பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் அமைந்தது.அதேபோல் இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு இலவசமாகவும், இலகு கடன் அடிப்படையிலும் உதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலான இரு தரப்பு இராணுவ உடன்படிக்கையொன்றும் செய்து கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
இலங்கையின் மிகவும் நெருக்கமான நட்பு நாடாக இன்று சீனா உள்ளது.விடுதலைப் புலிகளுடனான யுத்தம் இடம்பெற்ற காலத்தில் எமக்கு அதிகளவிலான ஒத்துழைப்புகளை வழங்கிய நட்பு நாடாக சீனா இருந்தது.இன்றும் சீனாவிடம் இருந்தே எமது பாதுகாப்பு தரப்பினருக்கு தேவையான ஆயுதங்கள், இராணுவ வாகனங்கள் என்பவற்றை பெற்று கொண்டுள்ளோம்.
இலங்கையின் விமானப்படையில் சீன விமானங்கள் உள்ளன, கடற்படையிலும் சீன கப்பல்கள் உள்ளன. இவற்றை எதிர்காலத்தில் முன்னெடுத்து செல்லவும், குறைபாடுகள் இருப்பின் அவற்றை சரிசெய்து கொண்டு புதிய வேலைத்திட்டங்களை உருவாக்கி கொள்ளவும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சிற்கும், சீன பாதுகாப்பு அமைச்சிற்கும் இடையிலான தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வதே சீன பாதுகாப்பு அமைச்சரின் விஜயத்தின் நோக்கமாக அமைந்துள்ளது மேலும் தெரிவித்தார்.