July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேங்காய் எண்ணெய் சர்ச்சை; சட்ட நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல்!

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்த நபர்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்செயலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸ்மா அதிபரை உத்தரவிடக்கோரியே இந்த ரிட் மனு சிங்களே அமைப்பின் பொது செயலாளர் மெடில்லே பஞ்ஞாலோக்க தேரரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் சித்திகா சேனாரத்ன, நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட 13 பேர் குறித்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

‘எப்லடொக்ஸின்’ எனும் நச்சுப் பொருள் கலந்த தேங்காய் எண்ணெய் சந்தையில் இருப்பது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் உறுதியானதையடுத்து இலங்கையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

இதையடுத்து பாம் எண்ணெய் இறக்குமதி மற்றும் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.