January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவோருக்கு இன்று முதல் அன்டிஜன் பரிசோதனை!

இலங்கையின் மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவோர் மற்றும் பிரவேசிப்போரை எழுந்தமானமாக அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இன்று முதல் மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் மற்றும் மேல் மாகாணத்துக்கு உள்நுழையும் 12 இடங்களை மையப்படுத்தி, அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கொவிட்-19 வைரஸ் பரவலை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொச்சிக்கடை– தோப்புவ, கொட்டதெனியாவ– படல்கம, நிட்டம்புவ– ஹெலகல சந்தி, மீரிகம– கிரியுல்ல, தொம்பே– சமனபெத்த, ஹங்வெல்ல– வனஹாகொடை, அளுத்கம– பெந்தர, தினியாவல சந்தி, இங்கிரிய– கெட்டகெதல்ல, பதுரெலிய கலவானை சமன் தேவாலயம் அருகில், மீகஹாதென்ன– அவித்தாவ மற்றும் தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன நுழைவாயிலுக்கு அருகிலும் இவ்வாறு எழுந்தமானமாக அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.