திருகோணமலை மாவட்டத்தில் மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுமேதகம்புர, மூதோவி, லிங்கநகர் மற்றும் கோவிலடி ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சீனன்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவட்டிக்குடா மற்றும் சீனன்குடா ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றுப் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
இதேவேளை ஏற்கனவே இந்த மாவட்டத்தில் பூம்புஹார் கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.