February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.சில்லாலை பகுதியில் 240 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது

யாழ்ப்பாணம், மாதகல் கடற்பரப்பை அண்மித்த சில்லாலை பகுதியில் 240 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சில்லாலை பகுதியில் தேடுதல் மேற்கொண்டபோது கவனிப்பாரற்று காணப்பட்ட பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 240 கிலோ கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக இளவாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு ,பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிக்கையிட்டதையடுத்து,நீதிமன்ற உத்தரவின் பேரில் கைப்பற்றப்பட்ட 240 கிலோ கேரள கஞ்சா பொதிகளை கடற்படையினர் தீயிட்டு அழித்தனர்.

இந்த கஞ்சா பொதிகள் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.