நாட்டில் பரவி வரும் புதிய வைரஸ் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளிடையே அதிகம் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக தொற்று நோயியல் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்தோடு, கர்ப்பிணித் தாய்மார்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டால் மிகவும் சிக்கலான சுகாதார நெருக்கடிக்கு ஆளாக நேரிடும் எனவும் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
எனவே, சிறுவர்கள், தொற்றா நோய் நிலைமையை உடையவர்கள், வயோதிபர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் இந்த கொரோனா தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்து கொள்வது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்தும், அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்கு வருபவர்களிடமிருந்தும் அடையாளம் காணப்படுவதால், பொதுமக்கள் சுகாதாரமான முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்றும் வைத்தியர் சுதத் சமரவீர மேலும் தெரிவித்தார்.