January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் சீன பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடல்

இலங்கை வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தள்ளது.

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கும் தனக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்ததாக சீன பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று இருநாடுகளுக்குமிடையிலான உறவுகள் இந்த விஜயத்தின் மூலம் பலமடைந்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

This slideshow requires JavaScript.

சீன பாதுகாப்பு அமைச்சர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு நேற்று இரவு இலங்கை வந்தார்.

இன்று முற்பகல் ஜனாதிபதியை சந்தித்த அவர், இன்று மாலை பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவை சந்திக்கவுள்ளார்.