குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வவுனியாவில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ரிஷாட் பதியுதீனின் கைதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அவரை உடனடியாக அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்துவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
சிறுபான்மை சமூகங்களிற்கு முன்னெடுக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவே தாம் வீதிக்கு இறங்குவதாகவும், இதன்படி ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யாவிட்டால் நாடுபூராகவும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வவுனியா நகரசபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினரான கே.இராசலிங்கம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களான ஏ. ஆர். எம். லரிப், அப்துல் பாரி உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.