இலங்கையில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் பரவி வரும் B.1.1.7 என்ற வைரஸ் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு, பொரலஸ்கமுவ மற்றும் குருநாகல் ஆகிய பிரதேசங்களிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இலங்கையில் தற்போது கொவிட் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.