January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

Lockdown or Curfew Common Image

இலங்கையில் இன்று காலை முதல் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புக்கான தேசிய செயலணியின் பிரதானி இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி மொணராகலை மாவட்டத்தின் வெல்லவாய பிரதேச சபைக்கு உட்பட்ட வெல்லவாய நகர சபைக்கு உட்பட்ட பிரதேசம், வெஹரயாய, கொட்டம்கஹபொக்க கிராம உத்தியோகத்தர் பிரிவு, புத்தள பிரதேசத்தில் ரஹதன்கம கிராம உத்தியோகத்தர் பிரிவு, உஹன பிரதேசத்தில் குமாரிகம கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாத்தளை மாவட்டத்தில் அலுகொல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் குறித்த பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.