யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தில் கொவிட் -19 சுகாதார கட்டுப்பாட்டு விதிகளை மீறி தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் ஆலயத்தின் தலைவரும் செயலாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் கொவிட்-19 கட்டுப்பாட்டு சுகாதார விதிமுறைகளை மீறி ஆலயத் திருவிழாவை நடத்தியதன் மூலம் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் பரவலை ஏற்படுத்த வழிசமைத்த குற்றச்சாட்டில் இவ்விருவர் மீதும் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய 50 பக்தர்களுக்கு மட்டுமே ஆலயத்தில் ஒரே நேரத்தில் வழிபட அனுமதிக்கப்படும் என சுகாதார அமைச்சு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.