ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மற்றும் பிரான்ஸ், ஜெர்மனி, ரொமானியா, இத்தாலி ஆகிய நாடுகளின் தூதுவர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
சந்திப்பின் போது, எதிர்க்கட்சியின் ஜனநாயக வழியிலான செயற்பாடுகளுக்கு இலங்கையில் உள்ள சவால்களையும், அரசாங்கத்தின் அடக்குமுறைகளையும் தாம் எடுத்துக் கூறியதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் பாராளுமன்றத்தில் மேற்கொண்ட உரைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பாகவும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.