பொலனறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி பொலனறுவை மாவட்டத்தில் ஹிங்குரங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிகெத கிராம சேவகர் பிரிவும், மாத்தளை மாவட்டத்தின் உகுவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லேகும்புர கிராம சேவகர் பிரிவும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேசங்களில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலையிலேயே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நேற்றைய தினத்தில் களுத்துறை, கம்பஹா, திருகோணமலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.