நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஒரு அமைச்சராக தனது கடமைகளை நிறைவேற்றுவதில் பல தடைகளை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஆனால் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனக்கு வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்கினார் என்றும் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து பேசிய அவர்;
கடந்த ஆட்சி காலப்பகுதியில் மற்றவர்கள் எனது அமைச்சு வேலைகளை தடுத்து நிறுத்துவதற்கு முயன்றபோது முன்னாள் ஜனாதிபதி எனக்கு முழுமையான ஆதரவை வழங்கியிருந்ததுடன்,என்னுடைய வேலைகளை முன்னெடுப்பதற்கு நிதிகளையும் ஒதுக்கி தந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் யாரும் என்னை வெளியேற்ற முடியாது.ஐக்கிய மக்கள் சக்தியில் எனது வேலையை செய்வதற்கு யாராவது தடையாக இருந்தால் அவர்கள் கட்சியை விட்டு வெளியேறலாம். நான் தற்சமயம் அமைச்சரவை அமைச்சர் அல்ல. நாட்டின் எதிர்க்கட்சி தலைவர். எனது கட்சியை வழிநடத்தும் அதிகாரம் எனக்கு கிடைத்துள்ளது ”என்றும் தெரிவித்தார்.
மேலும் மக்களுக்கு இரண்டாவது டோஸ் கொடுக்க அஸ்ட்ரா செனகா தடுப்பூசி பெற முடியவில்லை என்பதை அரசாங்கம் நிரூபித்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து உண்மையை பேசும் ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களை கைது செய்ய அரசாங்கத்திடம் திட்டங்கள் உள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Etirkkaṭcit talaivar ca