பிங்கிரிய பிரதேசத்தில் இயங்கி வரும் ஆடைத் தொழிற்சாலையொன்றில் 142 ஊழியர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த ஆடைத் தொழிற்சாலையை மூடும்படி கோரி, பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையிலும், தொழிற்சாலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பிரதேச மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பிரதேச மக்களின் ஆர்ப்பாட்டம் எல்லை மீறியதால், பிங்கிரிய பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் பிரதேச மக்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
கொரோனா அபாயம் நீங்கும் வரை தொழிற்சாலையை மூடுவதற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், நிர்வாக அதிகாரிகளுடன் கலந்துரையாடி, தீர்மானத்துக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.