நாட்டில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், அடுத்த இரண்டு மாதங்களில் 1600 வைத்தியர்களை இணைத்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் 2025 ஆம் ஆண்டளவில் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படவேண்டிய திட்டம் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனைத் தெரிவித்தார்.
இலங்கை மக்களின் அன்றாட சுகாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக முன்னெடுக்க உள்ள சிறப்புத் திட்டம் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இந்த சிறப்புத் திட்டத்தை செயற்படுத்துவதற்கு அரசினால் ஒதுக்கப்படும் நிதிக்கு மேலதிகமாக, உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் சலுகை கடன் உதவி வழங்க உள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
இந்த சிறப்பு திட்டத்தின் ஊடாக இலங்கையில் பரவும் தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு எதிர்பார்த்துள்ளது.