January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தற்காலிகமாக மூடப்பட்டது!

கொழும்பிலுள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதான அலுவலகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பணியகத்தில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்தே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அங்கு தொற்று நீக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் இதனால் 27, 28 ஆம் திகதிகளில் பணியகத்தின் பத்தரமுல்லையிலுள்ள பிரதான அலுவலகம் மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பணியகத்தின் விமான நிலைய கிளை தொடர்ந்தும் இயங்கும் என்று பணியகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

ஏதேனும் தகவல்களை பெற்றுக்கொள்ள விரும்புவோர் 1989 என்ற இலக்கத்தை அழைத்து பெற்றுக்கொள்ள முடியுமென்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.