இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அரச மற்றும் தனியார் துறையினர் வீட்டில் இருந்து வேலை செய்யும் காலத்தை அறிவிப்பது தொடர்பாக அரசாங்கம் ஆராய்கிறது.
அரச நிறுவனங்களின் ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வருவது தொடர்பான புதிய சுற்றறிக்கை ஒன்று நாளை வெளியிடப்பட உள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கும் அரச சேவையை வினைத்திறன் மிக்க முறையில் கொண்டு செல்வதற்கும் இந்த சுற்றறிக்கை வெளியிடப்படுவதாக அமைச்சின் செயலாளர் ஜெ.ஜெ. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், அரச அலுவலகங்களுக்கு 50 வீதமான ஊழியர்கள் சுழற்சி அடிப்படையில் வருவதற்கு அனுமதிக்கப்பட உள்ளதாக தெரியவருகின்றது.
ஏனையோர் வீட்டில் இருந்து பணியாற்றவும் அனுமதிக்கப்படவுள்ளனர்.
இதுதொடர்பான சுற்றறிக்கை நாளை அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.