
யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தி பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் 15 இராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.
கைதடிப் பகுதியில் இருந்து மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும் இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற வாகனமும் ஒன்றோடொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது காயமடைந்த இராணுவத்தினர் 15 பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சேதமடைந்த இராணுவ வாகனம் பலாலி இராணுவ முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை இராணுவ அதிகாரிகளும் பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.