இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் இரு நாடுகளுக்கிடையிலான எல்லையை பங்களாதேஷ் மூடியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் தீவிரமாகி உள்ளதால் அடுத்த 14 நாட்களுக்கு இந்தியாவுடனான எல்லையை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இந்தியா உடனான தனது எல்லையை பங்களாதேஷ் தற்போது மூடியிருக்கிறது.
அதேபோல் இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
மேலும் பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களது நாட்டு மக்களை இந்தியாவுக்குப் பயணிக்க வேண்டாம் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மேலும் இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் விமானத்தை 30% அவுஸ்திரேலிய அரசு குறைத்துள்ளது என தகவல் வெளியாகி இருக்கிறது
அத்துடன் கனடா,அமீரகம் போன்ற நாடுகளும் இந்திய விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் பல நாடுகள் இந்தியாவுக்கான போக்குவரத்தை தடை செய்திருக்கின்றன.