July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு துறைமுக நகர் சட்டமூலம்; மனுக்கள் மீதான தீர்ப்பு இந்த வாரம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது

அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள விசேட மனுக்கள் மீதான தீர்ப்பு இந்த வாரம் ஜனாதிபதிக்கும், சபாநாயகருக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள நிலையில், அதனை ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் இந்த சட்ட மூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதன் தீர்ப்பு புதன்கிழமை ஜனாதிபதிக்கும், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மனுக்களை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, செயலாளர் பாலித ரங்கே பண்டார, ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணி சார்பிலும், மக்கள் விடுதலை முன்னணி, தகவல் தொழில்நுட்ப துறைசார் நிபுணர்களின் தலைவர் கமல் ரேணுக பெரேரா, மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம், ட்ரான்ஸ்பேரன்சி இன்டர் நெஷனல்  உள்ளிட்ட மேலும் சிலர் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.