
File Photo
சுகாதார ஒழுங்கு விதிகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்கும் நிலையில், பொது இடங்களில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளிகளை பேணுதல் உள்ளிட்ட சுகாதார ஒழுங்குவிதிகளை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளது.
இதன்படி பொது இடங்களில் சுகாதார ஒழுங்குவிதிகளை மீறும் நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நேற்றைய தினத்தில் கொழும்பு உள்ளிட்ட நகர் பகுதிகளில் முகக் கவசம் அணியாது சுற்றித் திரிந்த 19 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வீட்டில் இருந்து வெளியே வரும் போது கட்டாயம் முகக் கவசங்களை அணிவது கட்டாயமாகும் எனவும், ரயில்கள், பஸ்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் போது மறக்காது முகக் கவனத்தை அணிந்து சமூக இடைவெளியை பேண வேண்டுமெனவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை பஸ்களில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லுதல், சுகாதர அதிகரிகளின் அனுமதியின்றி நடத்தப்படும் நிகழ்வுகள் தொடர்பாகவும் பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளதாகவும், இவ்வாறாக ஒழுங்கு விதிகளை மீறுவோருக் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.