இலங்கையில் தற்போது பரவும் புதிய கொரோனா வைரஸ் வகை மிகவும் ஆபத்தானது என பேராசிரியர் சன்ன ஜயசுமன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பொதுமக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும் விசேடமாக இந்தியாவின் நிலைமையைக் கருத்தில் கொண்டு அனைவரும் பொறுப்புடன் செயற்படும் படியும் பேராசிரியர் சன்ன ஜயசுமன கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த புதியவகை கொரோனா வைரஸ், முன்னரைவிடவும் தீவிரமாக பரவும் தன்மை கொண்டது.இந்த வைரஸ், தொற்று ஏற்பட்டு அறிகுறிகள் தோன்றும்போது நோயாளியின் நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரிட்டனில் பரவி வரும் கொரோனா வைரஸை ஒத்த வைரஸே இலங்கையிலும் பரவுவதாக தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகளிலிருந்து அறிய முடிவதாகவும் எனினும் உத்தியோகபூர்வ முடிவுகளை வெளியிட சில தினங்கள் ஆகலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் பொது மக்கள் அதுவரை, காத்திருக்காது சுகாதார விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடித்து ஒத்துழைக்கும் படி கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.