இலங்கையின் கொரோனா நிலைமைகள் குறித்து திருப்திப்பட முடியாது என்று அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு செயலணி நடத்திய விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் மிகப் பொறுப்புடன் கொரோனா கட்டுப்பாட்டு சுகாதார நடைமுறைகளைப் பேண வேண்டும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த வார இறுதியில் புத்தாண்டுடன் தொடர்புடைய நிகழ்வுகளையும் கொண்டாட்டங்களையும் நிறுத்திக்கொள்ளுமாறும் அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுவரையில் இலங்கையில் பரவிய கொரோனா வைரஸைவிட மாறுபட்ட, வீரியத் தன்மை கூடிய வைரஸ் ஒன்று இப்போது நாட்டில் பரவுவதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.