January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐநா அமைதி காக்கும் பணியில் பங்கேற்க 243 இலங்கை இராணுவ வீரர்கள் மாலி குடியரசுக்கு பயணம்

ஐநா அமைதி காக்கும் பணியில் பங்கேற்க 243 இலங்கை இராணுவ வீரர்கள் மாலி குடியரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வைத் தொடர்ந்து, படையினர் இன்று அதிகாலை மாலி நோக்கிப் புறப்பட்டனர்.

ஐநா விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 243 பேர் கொண்ட விசேட படையணி புறப்பட்டுள்ளது.

மாலியில் ஏற்பட்ட ஸ்திரத்தன்மை அற்ற நிலை காரணமாக அங்கு ஐநா அமைதிப் படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் மாலி குடியரசில் ஐநா பல பரிமாண ஒருங்கிணைந்த நிலையான தன்மையை ஏற்படுத்தும் திட்டத்தின் கீழ் பணியாற்றவுள்ளனர்.

This slideshow requires JavaScript.