January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் சஜித் பிரேமதாச கோரிக்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு பொது மன்னிப்பு வழங்குவது அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை தெரிவித்தார்.

இது தொடர்பாக எழுத்துபூர்வ கோரிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி தனக்கு அறிவித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.