May 23, 2025 5:02:36

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவுடனான பிரத்தியேக விமானப் போக்குவரத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியது இலங்கை

இலங்கை- இந்தியாவுக்கு இடையிலான பிரத்தியேக விமானப் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்தே, இந்த தற்காலிக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொரோனா சுகாதார கட்டுப்பாடுகளுக்கு அமைவாக இலங்கை- இந்தியாவுக்கு இடையே பிரத்தியேக விமான போக்குவரத்து வலயத்தை உருவாக்குவதற்கு இரு நாடுகளும் இணங்கியிருந்தன.

இந்தியாவின் தலைநகரில் நேற்று முதல் முழு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் போக்குவரத்து மீண்டும் ஆரம்பமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மேலும் பல நாடுகளுடனும் கொரோனா கட்டுப்பாடுகளுடனான ‘பிரத்தியேக விமானப் போக்குவரத்து’ திட்டம் தொடர்பில் கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.